மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் கூட்டு பிராத்தனை அதிக சத்தத்துடன் நடத்தப்படுவதால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்குள்ளவதாக பிரகாஷ் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைதி தான் சிறந்த பிரார்த்தனை, மௌனம் தான் மிக உயர்ந்த பிரார்த்தனை என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் எந்த மதமாக இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு ஏற்படும் வகையில் கூட்டு பிரார்த்தனை மேற்கொள்ள கூடாது என்றும் நீதிபதி கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.