நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை பரவிய நிலையில், சம்பவ இடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இந்தக் குப்பை கிடங்கில் பலத்த காற்று வீசியதன் காரணமாக, திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
கட்டுக்கடங்காமல் குப்பைக் கிடங்கில் எரிந்து வரும் தீயைக் அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால், அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை பரவியவதால், அப்பகுதி மக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் உட்பட ஏராளமான பாஜக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தீயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.