திருச்செந்தூர் அருகே தனியார் ஒத்துழைப்புடன் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ப்ளூ எக்னாமி திட்டத்தின் கீழ் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எட்டு இடங்களில் தனியார் பங்களிப்புடன் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்களுடைய எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை செயல்படுத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.