மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கணினி செயல்படாததால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள செம்புக்குடிபட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கோரிக்கைகளை தெரிவிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
ஆனால் கணினி செயல்படாததால் மனுக்களை பதிவேற்றம் செய்ய முடியாமல், அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். முகாமில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாததால் கூட்ட நெரிசலில் சிலர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், துறை சார்ந்த அதிகாரிகள் பலரும், மக்களின் சிரமத்தை போக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அரட்டை அடித்துக் கொண்டும், செல்போன் பேசியபடியும் இருந்ததால், முகாமில் பங்கேற்றவர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.