திருப்பூரில் நவீன இயந்திரத்தை விற்பதாக கூறி பணம் பெற்ற நபர் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை சேர்ந்த வாசுதேவன் என்பவர் பனியனில் இருந்து நுலை பிரிக்கும் இயந்திரம் விற்கப்படுவதாக விளம்பர படுத்தினார்.இதற்கு முதலீடும் செய்யலாம், மூலப்பொருட்களாகவும் பெற்று செல்லலாம் என தெரிவித்த வாசுதேவன் பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
பின்னர் வெகு நாட்களாகியும் இயந்திரத்தை வழங்காமல் இருந்து வந்த அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.