தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 103 ஏக்கர் அளவிலான கோயில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
விளாத்திகுளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான புன்செய் நிலங்களைத் தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக, கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. அதன் பேரில் ஆக்கிரமிப்பு நிலத்திற்குச் சென்ற அதிகாரிகள் தனிநபர்களின் பட்டாக்களை ரத்து செய்து 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்டனர்.