கொடைக்கானலில் பணிநீக்கம் செய்த கோபத்தில் மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மின் இணைப்புகளைச் சேதப்படுத்திய தற்காலிக மின் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் உள்ள மின்வாரியத்தில் சந்திரன் என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவரின் பணி திருப்திகரமாக இல்லை என்பதால், மின்வாரிய அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் மின்சாரக் கம்பிகளை அறுத்து இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த கிராம மக்கள், சந்திரன் பற்றி புகார் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரனைக் கைது செய்தனர்.