சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி அருகே அரசன்குட்டை பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். 2 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அருண், பள்ளத்தானூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த அருண், தாத்தாவை கல்லால் தாக்கியதுடன், உறவினர்கள் 3 பேரை கத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அருணை கைது செய்தனர்.