சென்னை, பாரிஸ் அருகே பழமையான விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எஸ்.சி போஸ் சாலையில் தனியாருக்குச் சொந்தமான வேதவிநாயகர் கோயில் ஒன்று இருந்தது.
இந்த கோயில் பழமையான கோயில் என்பதால் அதனை இடித்து அகற்ற அரசு அதிகாரிகள் மும்முரம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இரவு நேரத்தில் கோயில் இடிக்கப்பட்டு விநாயகர் சிலை மாயமாகி இருந்தது.
இதனைக் கண்டித்த இந்து முன்னணியினர் காவல் துறையினரையும், மாநகராட்சி அதிகாரிகளையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.