சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியான 3BHK படம் 12 நாட்களில் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான, இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 3BHK படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 14.3 கோடி வசூல் செய்துள்ளது.