அரசுக்குச் சொந்தமான இடத்தில் திமுக பிரமுகர் கட்டுமான பணிகள் செய்து வருவது குறித்த புகாரில் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை அருகே பச்சைமலை அடிவாரத்தில் உள்ள ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசுக்குச் சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடத்தை திமுக பிரமுகர் ராஜேந்திரன் அபகரித்துக் கொண்டதாகவும், அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே திமுக பிரமுகர் ராஜேந்திரன் பச்சைமலை அடிவாரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும், தனி நபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டு, அந்த பகுதியில் பூங்கா அமைத்துத் தரவேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.