கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே 52 அடி உயரத்தில் கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இருபோக பாசனத்திற்காக கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதல் போகப் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் தண்ணீரைத் திறந்து வைத்தனர்.
அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய் மூலமாக வினாடிக்கு 151 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.