ஆடி முதல் நாளையொட்டி கிருஷ்ணகிரியில் பாட்டுப்பாடி நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி முதல் நாளையொட்டி வேளாண் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.
ஆடி முதல் நாளில் நெல் நாற்று நடவு செய்வதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என்பது கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானபட்டி, சுண்டகுப்பம், திம்மாபுரம், கும்மனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாற்றினை பறித்து நெல் நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள் நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்களைப் பாடியவாறு வேளாண் பணியில் ஈடுபட்டனர்.