திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளி மாணவனை கஞ்சா போதையில் இருந்த நபர்கள் அரிவாளுடன் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருமாநல்லூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பேசிக்கொண்டிருந்த மாணவன் ஒருவரை அந்த கும்பல் கத்தியால் வெட்டியபடி துரத்திச் சென்றது.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.