நாட்டில் வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் ததியா கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலகில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளதாகப் பெருமிதமாகக் கூறினார்.
இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.