திருப்பூர் மாவட்டம், வளையங்காடு அருகே பனியன் நிறுவன உரிமையாளர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் மனமுடைந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
வ.ஊ.சி நகரைச் சேர்ந்த தயாளன் என்பவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இவர் 40 லட்சம் ரூபாய் வரை நிறுவன கணக்கில் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த நிறுவன உரிமையாளர் தயாளனுக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மிரட்டிப் பெற்றுள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தயாளன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தயாளனின் குடும்பத்தினர் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.