காசாவில் உணவு விநியோக முகாமில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 20 போ் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தொடர் முற்றுகை காரணமாகப் பஞ்சத்தில் வாடும் பாலஸ்தீனா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும், அத்தகைய நிவாரணப் பொருள்களின் விநியோக முகாம்களுக்கு வருவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் படுகாயம் அடைந்ததுடன் பலர் உயிரிழந்தனர்.