8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளின் 8ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாட புத்தகத்தைத் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சமீபத்தில் தயாரித்து வெளியிட்டுள்ளது.
புத்தகத்தில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி விவரிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கமளித்துள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், கடந்தகால நிகழ்வுகளைப் பற்றியும் அவை ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கல்வி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே அக்பர், பாபர் பற்றிய தகவல்கள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.