காவல்துறை உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாக மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
டிஎஸ்பி சுந்தரேசனின் 4 சக்கர வாகனத்தை மாவட்ட காவல்துறையினர் திரும்ப பெற்றனர். இதனால் அவர் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்றார்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சுந்தரேசன், காவல்துறை உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாகவும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
தனது வாகனம் பறிக்கப்படவில்லை என எஸ்.பி. கூறுவது முழுவதும் பொய் என குற்றம்சாட்டியுள்ள அவர், எத்தனை நாள்தான் குனிய குனிய குட்டுவீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே பேட்டியளித்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், டிஎஸ்பி சுந்தரேசன் கூறுவது உண்மை அல்ல எனவும் அவர் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.