புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
விக்னேஸ்வரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 98 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மதிய இடைவேளையின்போது வகுப்புக்கு வெளியே நின்றிருந்த 3 மாணவர்களை தெருநாய் கடித்தது. இதையடுத்து காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.