சத்தியமங்கலம் அருகே காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. அப்போது அவ்வழியாக காரில் சென்ற கோபாலகிருஷ்ணன் என்பவர் ஆபத்தை உணராமல் காரில் இருந்து இறங்கி சென்று யானைக்கு வாழைப்பழம் கொடுத்தார்.
இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், வனவிலங்குகளுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றம் எனவும் எடுத்துரைத்தனர்.