தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பின் கிளை அமைப்பாக தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு இருந்து வருகிறது. பகல்ஹாம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தேச நலன்களை பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை எதிர்க்கவும் ட்ரம்ப் விடுத்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.