ஆந்திர மாநிலம், திருப்பதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், சுமார் 8 கோடி ரூபாய் செலவில் பயோ கேஸ் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள காக்குலதிப்பத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் டன் அளவிற்கு மேல் குப்பைகள் சேர்ந்து கிடக்கின்றன. அதனை அகற்ற திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.
இந்நிலையில் தற்போது அமைக்கப்படும் கிடங்கால், 40 டன் மக்கும் தன்மை வாய்ந்த குப்பைகளிலிருந்து, ஒரு டன் பயோ கேஸ் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குப்பைகள் மலைபோல் குவிக்கப்படுவது வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.