அதர்வாவின் தணல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் படத்தில் அதர்வா நடித்து முடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமலிருந்தது.
இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாகத் தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி இணைந்துள்ளார்.
இந்த நிலையில், படம் அடுத்த மாதம் 29-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.