உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.
வட இந்தியாவில் ஆண்டுதோறும் இம்மாதத்தில் கன்வர் யாத்திரை தொடங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான யாத்திரை தொடங்கிய நிலையில், ஹரித்வாரின் ஹர் கி பவுரியில், டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிவபக்தர்கள் பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.