கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 14, 2026, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2025, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பேனா சிலைக்கும் கார் ரேசுக்கும் பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்ய தயாராக இருக்கும் திமுக அரசு, கட்டளை வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தாமல்  நிதி பற்றாக்குறை என முதலைக் கண்ணீர் வடிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகத் திகழும் கட்டளை வாய்க்காலின் புனரமைப்புத் திட்டத்தை நிதிப் பற்றாக்குறை என்று கூறி 2021-ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தி, விவசாயிகளின் வயிற்றில்  திமுக அரசு அடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

புனரமைப்புத் திட்டத்தைக் கைவிட்ட காரணத்தால், புதர் மண்டிக் கிடப்பதோடு, செடி கொடிகள் வளர்ந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வருவதில் சிரமமாகி பயிர்கள் வாடி வதங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பருவமழைப் பொய்த்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை மட்டுமே சாகுபடிக்காக விவசாயிகள் நம்பி வரும் வேளையில், வாய்க்காலைப் புனரமைக்காமல் காலந்தாழ்த்துவது முறையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேனா சிலை, கார் ரேஸ் என பல வீண் ஆடம்பர விளம்பரங்களுக்கு செலவு செய்யத் தயாராக இருக்கும் திமுக அரசு, உழவர் நலனைக் காப்பதற்காக மட்டும் செலவு செய்ய யோசிப்பது ஏன்? என்றும், நான்காண்டுகளாக உழவர் நலனைக் கண்டுகொள்ளாது இத்திட்டத்தைக் கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா? என்றும் அவர் வினவியுள்ளார்.

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் “நானும் டெல்டாக்காரன் தான்” என்று முழங்கும் இந்த விளம்பர மாடல் ஆட்சியை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் விரட்டியடிப்பர் என்பது உறுதி என்றும நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: pen statuewelfare of farmersDMK governmentNainar NagendranBJP state president Mr. Nainar NagendranKattala Canal
Share
Tweet
SendShare
Previous Post

தான் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பழங்குடியின பெண்!

Next Post

ஹரித்வாரில் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தூவப்பட்ட மலர்கள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies