தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யாராவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்குத் தங்கம் கடத்தி வந்ததாக, கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரன்யாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ரன்யாராவுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.