திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அவதாரபதியில் காலை 5 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடைபெற்றது.
தொடர்ந்து அவதாரபதியை ஒருமுறையும், கொடிமரத்தை 5 முறையும் கொடிப்பட்டம் சுற்றி வலம் வந்ததைத் தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.