நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டி பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இப்பகுதியில் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், மத்திய அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் K.P.சரவணன் தலைமை வகித்தார்.