வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை - உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!
Sep 7, 2025, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனத்தின் மீது உறவினர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.

வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் பகுதியைச் சேர்ந்த சபரிகண்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4ஆம் தேதி மாணவர் சபரிகண்ணனை ஆசிரியர் கண்டித்த நிலையில், வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவரை, ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் சடலத்தைக் கொண்டு வந்த வாகனத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெல்லை – அம்பை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் உயரதிகாரிகள், மாணவரின் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து, மாணவரின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

முன்னதாக, தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மாணவரின் உறவினர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில், 2  பள்ளி பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: உறவினர்கள் சாலை மறியல்Private matriculation school student in Veeravanallur commits suicide by consuming poison; relatives block road with bodyபள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

Next Post

நெதர்லாந்து : பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்!

Related News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies