மாரீசன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து மாரீசன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 25-ம் தேதி ரிலீசாகவுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தணிக்கை வாரியம் மாரீசன் படத்திற்கு “யு/ஏ” சான்றிதழை வழங்கியுள்ளது.