மாருதி நிறுவனம், கூடிய விரைவிலேயே புதிய e விட்டாரா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவுள்ளது.
உலகளவில் சூஸூகியின் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டது ‘e விட்டாரா’ எலெக்ட்ரிக் எஸ்யூவி. இந்தியாவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை முதலில் வெளியிடத் திட்டமிட்டிருந்தது மாருதி.
ஆனால், பல்வேறு காரணங்களினால் இந்திய வெளியீடு தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் முதலில் இங்கிலாந்தில் வெளியானது. எனவே, விரைவில் இந்தியாவிலும் வெளியிடும் முயற்சியில் மாருதி ஈடுபட்டுள்ளது.