உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் டைவிங் சப்போர்ட் போர்க் கப்பலான ஐஎன்எஸ் நிஸ்டார் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்தப் போர்க்கப்பல் ஆழ்கடல் செயல்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கப்பலானது இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.