சென்னை திருவெற்றியூரில் கமிஷன் தொகை வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மாநகராட்சி மின்வாரிய அதிகாரியை மிரட்டிய மண்டல குழு தலைவரின் ஆடியோ வைரலாகி வருகிறது.
சென்னை திருவெற்றியூரில் தெரு விளக்கு அமைக்கும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக திருவெற்றியூர் மண்டல குழு தலைவரான திமுகவைச் சேர்ந்த தனியரசு என்பவர், மாநகராட்சி மின்வாரிய உதவி இயக்குநரான கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது மாநகராட்சி மின்வாரிய உதவி இயக்குநர் கண்ணனிடம், தெருவிளக்கு ஒப்பந்தத்துக்குக் கூடுதல் கமிஷன் தொகை கேட்டு தனியரசு ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக அதிகாரி கண்ணன் பணி மாறுதலில் சென்றுள்ளார். இந்நிலையில் இருவருக்குமிடையே நடந்த உரையாடலின்போது, மண்டல குழு தலைவர் தனியரசு ஆபாசமாகப் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.