ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
Jul 18, 2025, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

கோயிலின் நுழைவாயில் பெண்கள் நெய் தீபங்கள் ஏற்றியும், தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். சில பக்தர்கள் குழந்தையைக் கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் அம்மனை பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்குத் தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், எலுமிச்சம் பழம், உப்பு ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள், விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், பச்சை மஞ்சளை அம்மியில் அரைக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. 500 கிலோ பச்சை மஞ்சளை 67 அம்மிகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அரைத்துக் கொடுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் வண்டியூர் மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மன் ஆடிப்பூர சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags: ஆடிபக்தர்கள் சுவாமி தரிசனம்First Friday of the month of Aadi: Devotees have darshan of Swami at Amman templesஅம்மன் கோயில்வெள்ளி கிழமை
ShareTweetSendShare
Previous Post

கட்சி பெயரை கூறி திமுகவால் மக்களை சந்திக்க முடியவில்லை : வானதி சீனிவாசன்

Next Post

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

மதுரை : வரதட்சணை கேட்டு மனைவியை சரமாரியாக தாக்கிய காவலர்!

டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies