டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் குடும்பத்திற்குப் பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகத் திகழ்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அரசூரில் உள்ள ஒரு தனியார் ஆலையில் பணிபுரிந்து கொண்டே கல்வி பயிலும் ஒடிசா மாணவிகளைச் சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், டிஜிட்டல் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய அவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குவதாக தெரிவித்தார்.
மாநில எல்லைகளைக் கடந்து உழைக்கும் ஒவ்வொருவரும் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருவதாகக் கூறிய அவர், பெற்றோருக்கு GPay மூலம் பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றியைப் பறைசாற்றுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.