கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகையையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், அங்குள்ள விவேகானந்தா கேந்திராவில் தங்கியுள்ளார். RSS, பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ள அவர், பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், விவேகானந்தா கேந்திராவை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.