வரதட்சணை விவகாரம் - காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!
Mar 15, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரதட்சணை விவகாரம் – காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 19, 2025, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறையில் பணியாற்றும் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனியை சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலனுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த தங்கப்பிரியாவை, வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கப்பிரியாவை கணவர் பூபாலன் வரதட்சணை கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பூபாலன், அவரது தந்தை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரான செந்தில்குமரன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, மனைவியை தாக்கியதை தனது சகோதரியிடம் பூபாலன் விவரித்துக் கூறும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரான மாமனார் செந்தில்குமரனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: ThangapriyaonstableMaduraisuspenddowry. caseAppandhirupathi police station
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

கருணாநிதி மூத்த மகன் மு.க. முத்து மறைவு – எல்.முருகன், நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies