தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணையத்தை வெளியிட உள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ஆம் தேதி, ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது
இதற்கிடையே கேரளாவில் வரும் 26ஆம் தேதியன்று நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற இருக்கும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக அவரது நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
பல்வேறு தலைவர்கள் பங்கேற்கும் இந்த முப்பெரும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அரியலூர் மற்றும் அண்டை மாவட்டங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவை முடித்த பின் அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி, வரும் 28ஆம் தேதியன்று தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.