கிட்னி திருட்டு சம்பவம் எதிரொலியாக ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி திருட்டு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட கிட்னி தரகரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கிட்னி விற்பனை தொடர்பாக மாநில முழுவதும் தனியார் மருத்துவமனையில் சட்ட மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் மீனாட்சி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த இரு தினங்களாக ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் டையாலிஸ் தவிர வேறு எந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடாது என தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் மருத்துவர் ராஜமூர்த்தி உத்தரவிட்டார்.