கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கடந்த 2022-ம் ஆண்டு, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி காவல்துறை வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்கள் திருடப்பட்டன.
இந்த விவகாரத்தில் 615 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக 300-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா, விசாரணையை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.