திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது - நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2025, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காவல்துறை நாளை மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியில் எந்தவொரு தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது. தற்போது விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தையும் தொந்தரவு செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையை வைத்து. 70 வயதைக் கடந்த போற்றுதலுக்குரிய மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல்நலம் குன்றியுள்ள நிலையில் இரண்டு நாட்கள் முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று குணமடைந்து திரும்பியுள்ளார்.

அதுவும் இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் கூட விசாரணை நடத்தத் தேடி வருவதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு ஆன்மீக விவகாரத்தில் செய்யும் அத்துமீறல்களையும், இந்து விரோத செயல்களையும் தட்டிக்கேட்கும் சமயப்பெரியவர்களுக்குத் தொடர்ச்சியாக ஏதாவதொரு மன அழுத்தத்தை  கொடுத்து வருகிறது என்பதைப் பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இனியும் காவல்துறையின் அத்துமீறல்களை தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, காவல் துறையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மதுரை ஆதீனத்தின் பக்கபலமாக  அங்கே இருப்பார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

நாகூரில் நடைபெறவிருக்கும் விவசாய பெருமக்களுக்கு ஆதரவான போராட்டத்தை முடித்துக்கொண்டு நானும் அங்கே செல்லவிருக்கிறேன். ஞானசம்பந்தர் காலம் முதல் புகழோடும், கீர்த்தியோடும் விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் மாண்பைக் காக்க என்றும் பாஜக துணை நிற்கும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: DMK governmentDMK regimeTamil Nadu BJP state president Nainar NagendranMadurai Aadeena enquiry
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

Next Post

குற்றங்களைத் தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? – நயினார் நாகேந்திரன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies