திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த நடிகர் பாபி சிம்ஹா, சம்மந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கோயிலில் இருந்த பக்தர்களுடன் நடிகர் பாபி சிம்ஹா, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.