ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஏராளமானோர் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கடலிலும், நாளிக்கிணற்றிலும் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.