கோவை மாவட்டம் வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை, சின்னகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.