ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தூய்மை பணியில் ஈடுபட்டார்.
திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு கபிலேஸ்வர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து தூய்மை பணியாளர்களின் உடை அணிந்த அவர், தூய்மை பணியில் ஈடுபட்டதோடு ஊழியர்களிடமும் கலந்துரையாடினார்.