திருப்பூர் அருகே சொத்து பிரச்னையில் ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராக்கியாபாளையம் பகுதியில் முருகேசன் என்பவரது மனைவி செல்வி, பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடை இருக்கும் இடத்தில் பங்கு கேட்டு முருகேசனின் சகோதரர்களான ராமச்சந்திரன், ரவி, பொன்ராஜ், அழகேசன் ஆகியோர்
தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக 4 பேர் மீதும் நல்லூர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்துள்ளார். இந்த சூழலில், ராமச்சந்திரன் மற்றும் திருச்செந்தூர் திமுக நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி உள்ளிட்டோர் அத்துமீறி கடைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது.
மேலும், செல்வி மற்றும் கடை ஊழியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், செல்வி உட்பட அனைவரையும் வெளியேற்றி கடையை பூட்டினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சியையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்…
தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி, எதிர் தரப்புக்கு ஆதரவாக நல்லூர் போலீசார் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.