ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கினர்.
சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.