மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் எதிரில் இளைஞர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை உலகத் தமிழ் சங்கம் பகுதியில் உள்ள கரும்பாலை சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற இளைஞர் மர்ம நபர்களால் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.