நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் ஊடகங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இந்தியர் ஒருவர் முதன் முதலாக கால் பதித்தது பெருமைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் 100 சதவீதம் வெற்றி அடைந்ததாக கூறிய பிரதமர் மோடி, தீவிரவாத முகாம்களை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று அழித்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.